7
2012
Maasi Magam
நம்பிக்கை நக்ஷத்திரம் – மாசி மகம்
ஒரு சமயம், உலகம் அழியும் நேரம் வந்தது, சிவனின் அறிவுரைப்படி, பிரம்மா, அமுதத்தை மண்ணில் பிசைந்து குடம் செய்தார். அதில் உலக உற்பத்திக்கான பீஜ(மூலம்) தொகுப்பை பத்திரப்படுத்தி மேருமலையில் வைத்தார். பிரளைய வெள்ளத்தில் மிதந்தகுடம் தென்திசை நோக்கி வந்து கரை சேர்ந்தது.பின்னர் சிவன் வேடனை போல் வந்து, அக்குடத்தை அம்பாள் உடைத்தார். அதில் இருந்து அமுதம் பூமியில் சிந்தியது. அந்த இடமே மகாமகக்குளமாக விளங்குகிறது. இந்நிகழ்ச்சி ஒரு மாசிமக நாளில் நிகழ்ந்தது. எல்லா புனித நதிகளும் குளத்தை இந்நாளில் வந்தடைந்தன. சிவபெருமான் பார்வதியுடன் நந்திவாகனத்தில் காட்சியளித்தார். பிரம்மா, அஷ்டதிக் பாலகர்கள், சப்தமாதர், இந்த்ராதி தேவர்கள் அனைவரும் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். இக்குளத்தில் மாசி, சித்திரை. கார்த்திகை மாதங்களில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்று கும்பகோணம் தலவரலாறு கூறுகிறது.
மகாமக குளம்
மாசிமகம் என்றதும் நினைவுக்கு வருவது கும்பகோணத்தில் உள்ள புனிதமான மகாமக குளம் தான். குளத்தை சுற்றி 16 மண்டபங்களில், பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாலேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர்,பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பரமேஸ்வரர்,கங்காதரேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிகின்றனர்.
மகாமகம்
ஒவ்வொரு ஆண்டும் வருவது மாசிமகம். இந்த நாளில் கும்பராசியில் இருக்கும் சூரியனும், சிம்மத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலமுடன் பார்த்துக் கொள்வர். இத்துடன் சிம்மராசியில் குருவும் சந்திரனுடன் சேர்ந்திருக்கும் மாசிமகமே மகாமகம். நவக்ரகங்களில் குரு, ராசிமண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 12 ஆண்டுகளாகும். அவர் சிம்மராசியில் இருக்கும் போது மகாமகம் கொண்டாடப்படும். கடந்த 2004ல் ஏற்கனவே மகாமகம் கொண்டாடப்பட்டது. மீண்டும் 2016ல் இந்த மகாமக விழா வருகிறது.
சுற்றி வந்தாலே சுகம்
குந்தி, தன் மகன் கர்ணனை ஆற்றில் விட்டதால் ஏற்பட்ட பாவத்தை எண்ணி பயந்தாள். பாவம் தீர, தவ்டிய முனிவரிடம் பிராயிச்சித்தம் கேட்டாள். மாசிமக நாளில் சிவனை வழிபாட்டு, ஏழுகடலில் நீராடினால் பாவ நிவர்த்தியாகும் என்று அருள் செய்தார். தீர்த்தயாத்திரை புறப்பட்ட குந்தி, மாசிமகத்தன்று நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரரை வழிப்பட்டு அங்குள்ள குளத்தில் நீராடினாள். சிவனருளால் ஏழுகடலால் தீர்த்தமும் குளத்தில் சங்கமித்தன. எனவே அந்த குளத்திற்கு “சப்தசாகரம்” என பெயர் உண்டானது. 12 படித்துறைகளுடன் இக்குளம் உள்ளது. ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற விரும்புவோர், இந்த குளத்தை 12 முறை வலம் வந்து வழிபடும் வழக்கம் உள்ளது.
1 Comment + Add Comment
Leave a comment
Categories
- Arya Vysyas (11)
- Festivals (19)
- Food (4)
- God (22)
- Health (5)
- Hinduism (31)
- Job (1)
- Marriage (8)
- Navarathri (4)
- Sitharkal (2)
- Slokas (4)
- Social Activities (1)
- Temple (5)
- Uncategorized (4)
- Vinayagar (6)
- Women (1)
Browse by Keywords
Calendar
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| « Apr | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||

An article by





Nice article, every year this day I’ll be @ my Family Deity temple.