31
2012
Life after Marriage
எதற்கு திருமணம்?
இருமனம் இணைந்து வாழ்வில் ஏற்படுத்தும் திருப்பம் தான் “திருமணம்”. ஒவ்வொரு மனிதனும் திருமணத்திற்கு பின்பு தான் முழுமையாகிறான். திருமணத்தை “ஆயிரம்காலத்து பயிர்” என்கின்றனர் அறிஞர்கள்.
அப்படிப்பட்ட திருமணவாழ்க்கை, ஒரு சில தினங்களில் முடிந்துவிடும் காலத்தில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.
திருமணத்தால் ஏற்படும் துன்பங்களை பார்த்து சகிக்க முடியாதபலர், திருமணமே வேண்டாம்! நாங்கள் திருமணம் செய்யாமல் இணைந்திருந்து மனம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிரிந்துவிடுவோம் என்று மனம் கூசாமல் சொல்லும் பலர் இன்று உள்ளனர்.
தாய் மடியில் கிடந்தது, நடைபழகி, தந்தையின் பாசம் பெற்று, நல்ல கல்வி, ஆரோக்கிய நண்பர்கள், மறக்க முடியாத பள்ளி பருவம், நினைவில் என்றும் நிற்கும் கல்லூரி காலம் என்று வசந்தகாலத்தை மட்டும் நமக்கு காட்டிய நம் வாழ்வியல் நெறிமுறை, திருமணத்தை மட்டும் நரகமாகவா தந்திருக்கும்.
இல்லை, நிச்சயம் இல்லை! திருமண பந்தம் என்பது நம்மை பக்குவப்படுத்துவதற்கு தான்.
“திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது” என்பதே தவறானது,
“திருமணம் சொர்க்கத்தை நிச்சயப்படுத்துகிறது” இது தான் சரி.
திருமணத்தை விடுங்கள், நாம் பணிபுரியும் இடத்தில கூட நமக்கு அதிக நெருக்கடிகள் உள்ளன.
(1) சக பணி நண்பர்கள் நம்மை புறந்தள்ளுவது,
(2) மேலாளர், நாம் செய்யாத தவறை சுட்டிகாட்டுவது,
(3) அதிக வேலை, நேர விரயம் ஆனால் குறைந்த சம்பளம்,
(4) எட்டாத விலையில் நம் ஆசை பொருட்கள்,
என்று இந்த பட்டியல் நீளும். இவை அனைத்தையும் நாம் சகித்து கடந்தால் தானே நமக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
சாதாரண பணிக்கே இப்படிப்பட்ட சங்கடங்கள் என்றால், மனிதனாக பிறந்த நாம் நம்மை வளப்படுத்த உயர்நிலை அடைய எவ்வளவு இன்னல்கள் நேரும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
அது தான், நாம் உயர்நிலை அடையகல்வி பயிலுகின்றோமே! என்கின்றீர்களா? அது உங்கள் வாழ்வை வளமாக்கதான், நான் சொல்வது உங்களையே வளமாக்க.
திருமணதிற்கு பின்னர் நாம் துன்பங்களாக நினைக்கும் அனைத்துமே நம்மபக்குவப்படுத்தி உயர்நிலை காட்டும் காரணிகள்.
நமது கேளிக்கைகளை குறைத்து, விரைவில் இல்லம் திரும்புதல் (இது நேரத்திற்கான மதிப்பை உணரவைக்கும்), மாதந்தோறும் வீட்டின் நிதிநிலை சரிசெய்தல், இன்னும் பலவற்றை மனைவியுடனும் (அ) கணவனுடனும் சீர்செய்வது என்பது நமக்கான படிப்பினை.
இவ்வளவையும் கேட்டு, இத்தனை பிரச்சனைகளுக்கிடையில் திருமணம் தேவையா? வேதங்கள் திருமணத்தை, அதன் வாழ்வியல் நெறிகளை சற்று இலகுவாக வைத்திருக்கலாமே! என்றால், அதற்குபதில்,
“Even a GAME having more Rules & regulations to reach the Goal, then think about our LIFE”
Leave a comment
Categories
- Arya Vysyas (11)
- Festivals (19)
- Food (4)
- God (22)
- Health (5)
- Hinduism (31)
- Job (1)
- Marriage (8)
- Navarathri (4)
- Sitharkal (2)
- Slokas (4)
- Social Activities (1)
- Temple (5)
- Uncategorized (4)
- Vinayagar (6)
- Women (1)
Browse by Keywords
Calendar
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| « Apr | ||||||
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||

An article by




